இயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பகாசூரன்’ படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. 'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' படங்கள் மூலம் கவனம் பெற்றவர் மோகன்.ஜி. அடுத்ததாக 'ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன்' தயாரிப்பில் உருவாகும் 'பகாசூரன்' படத்தை இயக்கி முடித்துள்ளார். இதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் செல்வராகவன், நட்டி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குநர் மோகன்.ஜி. அதில், 'பகை முடிக்க வருகிறான் பகாசூரன்' என்று குறிப்பிட்டு 'பகாசூரன்' படத்தின் டீசர் வரும் 28-ஆம் தேதி காலை 10.10 மணிக்கு வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
படத்தின் முதல் பார்வையை பொறுத்தவரை கழுத்தில் ருத்ராட்சம் அணிந்தும், உடம்பில் பட்டையுடனும் முழுக்க முழுக்க உக்கிரமான ஆன்மிகவாதி கெட்டப்பில் கோபத்துடன் நின்று கொண்டிருக்கிறார். இது 'ஆயிரத்தில் ஒருவன்' கார்த்தி கெட்டப்பை ஒத்திருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
» உலக அளவில் ‘லைகர்’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.33 கோடி
» “ஆக்ஷன் மட்டுமல்ல... அழகான காதலும் உண்டு” - ‘கேப்டன்’ குறித்து ஆர்யா
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago