7 கெட்டப்களுடன் சர்ப்ரைஸ் தரும் விக்ரம் - வெளியானது ‘கோப்ரா’ ட்ரெய்லர்

By செய்திப்பிரிவு

விக்ரம் நடிக்கும் 'கோப்ரா' படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை சமூக வலைதளங்களில் விக்ரம் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் லலித்குமார் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் வெளியாகிறது. தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இப்படத்தில் இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - 7 வெவ்வேறு கெட்டப்புகளில் ட்ரெய்லரிலேயே சர்ப்ரைஸ் தருகிறார் விக்ரம். இந்த சர்ப்ரைஸுடன் பார்க்க ஆரம்பத்தில் கணிதத்துடன் தொடர்புடைய கதையை களமாக இயக்குநர் அஜய் ஞானமுத்து மாற்றிருப்பதை உணர முடிகிறது. பாம்பு வகையான கோப்ராவை டைட்டிலில் சேர்த்ததற்கான நியாயம் படத்தில் இருப்பதை ட்ரெய்லரில் உணர்த்துகிறது.

இறுதியில் 'நான் ஒரு சாதாரண மேத்ஸ் வாத்தியார்' என்ற டையலாக், அந்நியன் படத்தின் அம்பி டையலாக்கை நினைவுப்படுத்துகிறது. புதிய கெட்டப்கள், வெளிநாடு ஷூட்டிங், கணிதம், உளவியல் என நகரும் ட்ரெய்லர் நடிகர் விக்ரமும் ஏற்றத்தை கொடுக்குமா என்பதை ஆகஸ்ட் 31-ம் தேதி தான் உறுதிபடுத்த முடியும்.

ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்