ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான 'பென்சில்' படத்தின் இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 46.
நடிகர் ஜீ.வி.பிரகாஷ்குமார், ஸ்ரீதிவ்யா நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பென்சில்'. இந்தப் படத்தை இயக்கியிருந்தார் மணி நாகராஜ். இதையடுத்து கோபிநாத், அனிகா சுரேந்திரா, வனிதா விஜய்குமார், லீனா குமார், சீதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் 'வாசுவின் கர்ப்பிணிகள்' படத்தை இயக்கினார்.
கடந்த ஜூலை 7-ம் தேதியன்று இப்படத்தின் ஃப்ரஸ்ட் லுக்கை நடிகர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்தப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ள நிலையில், இன்று மதியம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மணி நாகராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
» “விஜயகாந்த் என்றாலே தைரியம்தான்” - நேரில் வாழ்த்திய கார்த்தி புகழாரம்
» லைகர் Review: நாயகனின் அடியில் எதிராளி கூட தப்பிக்க முடிகிறது. நம்மால்..?
46வயதான மணி நாகராஜ் திருச்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இறப்புக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
2 days ago