“விஜயகாந்த் என்றாலே தைரியம்தான்” - நேரில் வாழ்த்திய கார்த்தி புகழாரம்

By செய்திப்பிரிவு

'விஜயகாந்த் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது அவருடைய தைரியம்தான்' என்று விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி அவரை நேரில் வாழ்த்து தெரிவித்த நடிகர் கார்த்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவின் ‘கருப்பு எம்ஜிஆர்’ என புகழப்படும் நடிகர் விஜயகாந்த் 1979 காலக்கட்டத்தில் தமிழ் திரையுலகிற்குள் நுழைந்தர். பல படங்களில் நடித்தவர், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்தார். இதையடுத்து, தேமுதிக என்ற கட்சியை உருவாக்கி எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றத்தில் செயல்பட்டார். நடிகராக இருந்து அரசியல்வாதியாக பரிணமித்த விஜயகாந்த் இன்று தன்னுடைய 70-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கேப்டன் விஜயகாந்திற்கு பொருளாளர் கார்த்தி கார்த்தி கார்த்தி நேரில் சென்று மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து பேசிய கார்த்தி, நடிகர் விஜயகாந்தைப் பற்றி கூறுகையில்,''விஜயகாந்த் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது அவருடைய தைரியம்தான். அதேபோல், யார் வந்தாலும் சாப்பிடலாம் என்று சிறு வயதிலிருந்தே கேள்விபட்டிருக்கேன்.

யாரிடமும் எந்தப் பாகுபாடும் இல்லாமல் அன்பு காட்டுவது எவ்வளவு பெரிய விஷயம். இப்படி ஒரு மனிதரை அவருடைய பிறந்தநாளில் நேரில் வந்து வாழ்த்துவதுதான் அவருக்கு செய்யும் மரியாதையாக இருக்கும். அதிலும் சங்கம் சார்பாக வந்து வாழ்த்தியது நிறைவாக உள்ளது'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE