புஷ்பா ஸ்டைலில் நியூயார்க் மேயர்

By செய்திப்பிரிவு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், 75வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு பிரம்மாண்ட அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் தேசிய கொடியை ஏந்திச் செல்லும் கிராண்ட் மார்ஷல் விருந்தினராக, நடிகர் அல்லு அர்ஜுன் தனது மனைவி சினேகாவுடன் கலந்துகொண்டார். இதில் 5 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

நிகழ்ச்சிக்கு பிறகு, நியூயார்க் மேயர் எரிக் ஆதம்ஸ் எழுதிய பாராட்டுக் கடிதம் அவருக்கு வழங்கப்பட்டது. அப்போது புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும்போது, ’புஷ்பா’ படத்தில் அல்லு அர்ஜுன் தாடியை ஸ்டைலாக கோதுவது போல, மேயர் எரிக் ஆதம்ஸும் போஸ் கொடுத்தார். இந்தப் புகைப்படங்களை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு செய்துள்ள அல்லு அர்ஜுன், மேயருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதற்கிடையே ‘புஷ்பா 2’ படத்தின் பூஜை ஹைதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் இயக்குநர் சுகுமார், தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்