ரஜினியின் ‘ஜெயிலர்’ போஸ்டர் வெளியீடு; படப்பிடிப்பு தொடக்கம் 

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் முதல் போஸ்டரை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்து. மேலும், இன்று முதல் படப்பிடிப்பு தொடங்குவதாகவும் அறிவித்துள்ளது.

‘ஜெயிலர்’ படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். கலாநிதி மாறன் இந்தப் படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தின் தலைப்பு கடந்த ஜூன் மாதம் வெளியானது.

இந்நிலையில், ‘22.8.22 - 11:00 AM #Jailer’ என்ற கேப்ஷனுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சோஷியல் மீடியா ஹேண்டிலில் ஒரு போஸ்டரை பகிர்ந்திருந்தனர். அந்தப் போஸ்டரில் நடிகர் ரஜினிகாந்த் பின்னால் கைகட்டியவாறு நின்று கொண்டிருப்பது போன்ற சில்ஹவுட் புகைப்படம் இருந்தது.

அது குறித்து ரசிகர்கள் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மோஷன் பிக்சர், அப்டேட், வெயிட்டிங் என ரசிகர்கள் அதற்கு கமெண்ட் செய்து வந்தனர்.

இந்நிலையில், வயதான தோற்றத்தில் ரஜினிகாந்த் நிற்பது போன்ற போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குவதாகவும், படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. ஜெயிலர் படத்தின் போஸ்டரை ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE