சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி உள்ள 'காட்ஃபாதர்' டீசர் வெளியீடு 

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி உள்ள 'காட்ஃபாதர்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சல்மான் கான், நயன்தாரா போன்றவர்களும் நடித்துள்ளனர்.

கடந்த 2019-இல் மலையாள மொழியில் வெளியான திரைப்படம் லூசிபர். இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடித்திருந்தார். நடிகர் பிருத்விராஜ் இந்த படத்தை இயக்கி இருந்தார். பாக்ஸ் ஆஃபிஸில் கலெக்‌ஷனை அள்ளிய திரைப்படம் இது.

இந்நிலையில், இந்த படம் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ளார். அவருடன் சல்மான் கான், நயன்தாரா, பூரி ஜெகன்நாத், சமுத்திரக்கனி போன்றவர்களும் நடித்துள்ளனர். இயக்குனர் மோகன் ராஜா இயக்கியுள்ளார்.

கொனிடெலா மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனங்கள் இந்த படத்தை இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்போது இதன் டீசர் வெளியாகி உள்ளது. சுமார் 1.33 நிமிடங்கள் ஓடும் இந்த டீசர் கவனம் ஈர்க்கும் வகையில் உள்ளது. இதனை சிரஞ்சீவி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சிலர் ஒரிஜினல் வெர்ஷனில் நடித்த மோகன்லால் நடிப்பு குறித்தும் பேசி வருகின்றனர்.

டீசரை காண...

<iframe width="668" height="376" src="https://www.youtube.com/embed/JO6EVchzAlI" title="God Father Teaser | Megastar Chiranjeevi | Salman Khan | Mohan Raja | Thaman S | R B Choudary" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்