''மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். படங்கள் சரியான வரவேற்பை பெறாததற்கு நாங்கள் தான் காரணம். நான் தான் காரணம்'' என்று நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.
அக்சய்குமார், ரகுல்பிரீத் சிங் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி திரைப்படம் கட்புட்லி (Cuttputlli). விஷ்ணுவிஷால் நடிப்பில் தமிழில் வெளியான 'ராட்சசன்' திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான இந்தப்படம் வரும் செப்டம்பர் 8-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் அக்ஷய்குமார் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
பாலிவுட் படங்களின் தோல்வி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ''மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். படங்கள் சரியான வரவேற்பை பெறாததற்கு நாங்கள் தான் காரணம். நான் தான் காரணம். நான் மாற்றங்களைச் செய்ய வேண்டும், பார்வையாளர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு என்னைத் தவிர வேறு யாரும் குற்றம் சொல்ல முடியாது" என்றார்.
» 2 நாட்களில் ரூ.20 கோடி வசூலித்த தனுஷின் திருச்சிற்றம்பலம்
» நல்ல கன்டென்ட் உள்ள படங்கள் ஜெயிக்கும் - மாஸ்டர் மகேந்திரன் நம்பிக்கை
அண்மையில் வெளியான அவரது ரக்சாபந்தன் திரைப்படம் பாக்ஸ்ஆபீஸில் பெரும் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் 'பாய்காட் ரக்சாபந்தன்' என்ற சமூகவலைதள ட்ரெண்டும் இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது
முக்கிய செய்திகள்
சினிமா
3 mins ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago