சினிமாவில் நல்ல கன்டென்ட் உள்ள படங்கள் வெற்றிபெறும் என நடிகர் மாஸ்டர் மகேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மினெர்வா பிக்சர்ஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரித்துள்ள “அர்த்தம்” படத்தை மணிகாந்த் தல்லகுடி எழுதி இயக்கியுள்ளார். இரு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில், மாஸ்டர் மகேந்திரன், ஷ்ரத்தா தாஸ் உடன், அஜய், ஆமணி, சாஹிதி, பிரபாகர், ரோகினி மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் மாஸ்டர் மகேந்திரன், ''நம்மை நம்பி ஹைதராபாத்திலிருந்து இங்கு வந்து தயாரித்திருக்கிறார் இந்த படத்தின் தயாரிப்பாளர். நல்ல கன்டென்ட் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையில் உழைத்துள்ளோம். இவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்த நினைத்தேன். என்னை நம்பி பெரிய பட்ஜெட்டில் ஒரு படத்தை தயாரித்துள்ளார்.இயக்குநர் மணிகாந்துக்கும் எனக்கும் சண்டை வந்ததே இல்லை.
எங்களுக்குள் நல்ல புரிந்துணர்வு இருந்தது. என்னை நம்பி தமிழுக்கு வந்ததாக சொன்னார், நான் எங்கள் டெக்னீஷியன்களை நம்பலாம் என்றேன். படத்தை அழகாக எடுத்துள்ளார். ரோபோ, வினோத் எனக்காக நடித்து கொடுத்தார்கள். நிறைய நடிகர்கள் நடித்துள்ளனர். ஷ்ரத்தா தாஸ் இந்தியாவில் மிகப்பெரிய பிரபல நடிகை. மிகச்சிறந்த நடிகை கடின உழைப்பாளி தமிழில் பெரிய வெற்றி பெறுவார். நீங்கள் தரும் ஆதரவில் தான் என் திரைப்பயணம் இருக்கிறது. உங்கள் அன்புக்கு நன்றி'' என்றார்.
இயக்குநர் மணிகாந்த் தல்லகுடி பேசுகையில், ''இந்தப்படம் எனது முதல் தமிழ் படம். இரண்டு மொழிகளிலும் எடுத்துள்ளோம். சென்னையில் தான் 70 சதவீதம் ஷூட் செய்தோம். ரோபோ சங்கர், வினோத் மிகப்பெரும் ஆதரவாக இருந்தார்கள். மகேந்திரன் மிகப்பெரிய ஒத்துழைப்பை தந்தார். மிகச்சிறப்பாக நடித்துள்ளார். ஷ்ரத்தா தாஸ் அழகான நடிப்பை தந்துள்ளார். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் பெரிய நன்றிகள்'' என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
34 mins ago
சினிமா
46 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago