'டோபாரா' முதல் நாள் வசூல் ரூ.70 லட்சம் மட்டுமே | “பாய்காட் ட்ரெண்ட் ஒரு ஜோக்” - டாப்ஸி

By செய்திப்பிரிவு

'டோபாரா' திரைப்படத்திற்கு விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பு இருந்த நிலையில், அந்தப் படம் முதல் நாளில் வெறும் ரூ.70 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளது.

அனுராக் காஷ்யப் இயக்கத்தில் டாப்ஸி, பவைல் குலாட்டி, நாசர், ராகுல் பாட் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் 'டோபாரா'. இந்தப் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் டிரெண்ட் செய்தனர்.

நாடு முழுவதும் இப்படம் 370 திரையரங்குகளில் வெளியான நிலையில், பாசிட்டிவான விமர்சனங்கள் வந்த நிலையிலும் முதல் நாளில் இப்படம் ரூ.70 லட்சத்தை மட்டுமே வசூலித்துள்ளது.

இந்த நிலையில், #Boycott டிரெண்ட் குறித்து நடிகை டாப்ஸி கூறும்போது,ம் “இந்த புறக்கணிப்பு ட்ரெண்ட் ஒரு நகைச்சுவைதான். இம்மாதிரியான ட்ரெண்ட்டுகள் தினமும் நடக்கும்போது, அவை என்னை பாதிக்காது. அது பயனற்றது. நான் திரைத்துறையில் இருக்கும் பிற நடிகர்களை பற்றி பேசவில்லை.

நான் என்னையும் அனுராக்கையும் பற்றி பேசுகிறேன் எங்களை பொறுத்தவரை இந்த #Boycott ட்ரெண்ட் நகைச்சுவைதான். பார்வையாளர்களுக்கு படம் பிடித்தால் அவர்கள் படத்தை பார்ப்பார்கள். பிடிக்கவில்லை என்றால் பார்க்கமாட்டார்கள். ஆனால், இவ்வாறான #Boycott ட்ரெண்ட்கள் எனது பார்வையாளர்களின் அறிவை குறைத்து மதிப்பிடுகிறது.

’டோபாரா’ படத்தின் கதை 2018-ஆம் ஆண்டே உருவாகிவிட்டது. இது எந்தப் படத்தின் காப்பியும் அல்ல” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE