நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'திருச்சிற்றம்பலம்' படம் தமிழ்நாடு முழுவதும் ரூ.9 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இப்படம் நேற்று (ஆகஸ்ட் 19) திரையரங்குகளில் வெளியானது. அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படம் தமிழ்நாடு முழுவதும் ரூ.9.52 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாசிட்டிவ் விமர்சனங்களால் படம் வரும் நாட்களில் கூடுதல் வசூலை எட்டும் என திரை வர்த்தகர்கள் கணித்துள்ளனர்.
இந்தாண்டில் தமிழ்நாட்டில் அதிக வசூலை ஈட்டிய பட்டியலில் ‘வலிமை’ முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் ‘பீஸ்ட்’, மூன்றாம் இடத்தில் ‘விக்ரம்’ உள்ளிட்ட படங்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாடு டாப் ஓப்பனிங்
» பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ ட்ரெய்லர் எப்படி? - ஒரு விரைவுப் பார்வை
» அதிக பட்ஜெட்டில் ‘எம்புரான்’ தலைப்புடன் உருவாகும் ‘லூசிஃபர்’ 2-ம் பாகம்
முக்கிய செய்திகள்
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago