இந்திப் படங்களின் தொடர் தோல்விக்கு மக்களிடம் பணம் இல்லாததுதான் காரணம் என்று இந்திப் பட இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.
இந்தியில் கடந்த சில மாதங்களாக வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றன. நடிகர் அக்ஷய் குமார் படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வரும் நிலையில் சமீபத்தில் ஆமிர்கான் நடிப்பில் வெளியாகியுள்ள ’லால் சிங் சத்தா’ படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் இந்தி திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இந்நிலையில், பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப், டாப்ஸி நாயகியாக நடித்துள்ள ‘தோ பாரா’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படம் குறித்து பேசிய அவரிடம், பாலிவுட் படங்களில் தொடர் தோல்வி குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறும்போது, “மக்களின் பாக்கெட்டில் பணம் இல்லை. ஒரு படத்தைப் பார்க்க முடிவு செய்தால், அந்தப் படம் பற்றி உறுதி செய்த பின்பே செல்ல விரும்புகிறார்கள். ’கே.ஜி.எஃப்’ படத்தின் வெற்றி அதன் அடுத்தப் பாகத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. ’பாகுபலி’ படங்களுக்குப் பிறகு ராஜமவுலி படங்களுக்கு எதிர்பார்ப்பு இருந்தது. அதனால், ’ஆர்ஆர்ஆர்’ வெற்றி பெற்றது’’ என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 min ago
சினிமா
27 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago