அஜித்தின் 'ஏகே61' படத்தின் படப்பிடிப்பும், விஜயின் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பும் விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இருவரும் ஷூட்டிங் இடைவெளியில் ஒருவரையொருவர் சந்திப்பார்களா என்ற கேள்வியுடன் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
'வலிமை' படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத்துடன் கைகோத்துள்ளார். இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படம் 'ஏகே61' என அழைக்கப்படுகிறது. அஜித் ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். அவர் தவிர 'சார்பட்டா பரம்பரை' படத்தில் கலக்கிய ஜான் கொக்கென், வீரா, யோகிபாபு, மகாநதி சங்கர் போன்ற பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்து புகழ்பெற்ற அஜய் இணைந்துள்ளதாக என்று செய்திகள் வெளியானது. 'ஏகே61' படத்தின் படப்பிடிப்பைத் தொடர்ந்து நடிகர் அஜித் ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தற்போது சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு 'ஏகே61' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக விசாகப்பட்டினம் சென்றிருக்கிறார். இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
» ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலினை வைத்து வெளியிட திட்டமா?
» திருச்சிற்றம்பலம், ஜீவி 2 - தமிழ்ப் படங்களில் இந்த வார ரிலீஸ்
இதனிடையே, வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இருவரும் தங்கள் பிஸியான படப்பிடிப்புகளுக்கு நடுவே சிறிய இடைவெளியில் ஒருவரையொருவர் சந்திப்பார்களா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
முன்னதாக, கடந்த 2011-ம் ஆண்டு 'மங்காத்தா', 'வேலாயுதம்' படங்களின் படப்பிடிப்பின்போது, இருவரும் ஒருவரையொருவர் நேரில் சந்தித்துக்கொண்டனர். 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அப்படியொரு சம்பவம் நடக்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago