5 கெட்டப்பில் சந்தானம் - ஷங்கரின் உதவி இயக்குநர் இயக்கும் படம்

By செய்திப்பிரிவு

நடிகர் சந்தானம் 5 கெட்டப்களில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநர் இயக்கவுள்ளார்.

ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் 'குளுகுளு'. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படத்தில் சந்தானம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த கோவர்தன் அண்மையில் சந்தானத்தை சந்தித்து படத்தின் கதையை கூறியிருக்கிறார். காமெடி, ஃபான்டஸி கலந்த இப்படத்தின் கதை சந்தானத்திற்கு மிகவும் பிடிக்கவே, படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், படத்தில் 5 வெவ்வேறு கெட்டப்களில் சந்தானம் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. முதற்கட்ட பணிகளை தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளதாகவும், விரைவில் படபிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE