அன்பை அனுபவிக்கவே ட்விட்டரில் இணைந்தேன்: நடிகர் விக்ரம்

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் விக்ரம் ‘ட்விட்டர்’ சமூக வலைதளத்தில் இணைந்துள்ளார். இதனை அவரே வீடியோ பதிவு மூலம் உறுதி செய்துள்ளார். அதில் அவர் என்ன சொல்லியுள்ளார் என்பதை பார்ப்போம்.

தமிழ் திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் விக்ரம். இவரை ரசிகர்கள் அன்போடு சியான் என அழைப்பார்கள். இவரது நடிப்பில் உருவாகி உள்ள கோப்ரா, பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் விரைவில் வெள்ளித்திரையில் வெளிவர உள்ளன. இந்நிலையில், ட்விட்டர் தளத்தில் அவர் இணைந்துள்ளார்.

“ஹாய்… எல்லாருக்கும் வணக்கம். இது நான்தான் சியான் விக்ரம். நிஜமாவே நான்தான். மாறுவேஷத்துல இல்ல. ரஞ்சித் படத்துக்காக நான் ரெடி ஆகிட்டு இருக்கேன். ட்விட்டர்ல இருந்தா நிறைய விஷயங்கள் எல்லாருக்கும் சொல்லிடலாம். ரசிகர்கள் எல்லோருக்கும் தெரியும் அப்படின்னு சொன்னாங்க.

இங்க நான் கொஞ்சம் லேட். கிட்டத்தட்ட 10 - 15 வருஷம் இருக்கும்னு நினைக்கிறேன் ட்விட்டர் தொடங்கி. ரொம்ப லேட்டா வந்து இருக்கேன். ஆனா இதுதான் அதற்கான சரியான நேரம் என நினைக்கிறேன். நமக்காக அன்பு காத்துகிட்டு இருக்குன்னு நிறைய பேர் சொல்லி நான் கேள்வி பட்டிருக்கேன். அதை அனுபவிக்க ட்விட்டர்ல ஜாயின் ஆகி இருக்கேன். உலகம் முழுவதும் உள்ள எனது ரசிகர்களே, நண்பர்களே ‘ஐ லவ் யூ’” என அந்த வீடியவில் விக்ரம் பேசியுள்ளார்.

இப்போது அதனை பலரும் லைக் செய்தும், ரீ-ட்வீட் செய்தும் வருகின்றனர். அதோடு அவரை ட்விட்டர் தளத்தில் பின்தொடரவும் தொடங்கி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்