ஆமீர்கான் நடிப்பில் 'லால் சிங் சத்தா' மற்றும் அக்ஷய் குமார் நடிப்பில் 'ரக்ஷா பந்தன்' படங்கள் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாகின. படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பார்ப்போம்.
அத்வைத் சந்தன் இயக்கத்தில் ஆமீர்கான் நடித்துள்ள படம் 'லால் சிங் சத்தா'. 'ஃபாரஸ்ட் கம்ப்' ஹாலிவுட் படத்தின் அதிகாரபூர்வ மறு ஆக்கமான இந்தப் படத்தில் கரீனா கபூர், நாக சைதன்யா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தமிழகத்தில் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை வெளியான இந்தப் படம் முதல் நாள் வசூலாக ரூ.10 கோடி முதல் 12 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக நம்பகமான தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் ஆமீர்கானின் படத்துக்கு கிடைத்த மோசமான ஓப்பனிங் இது என்றும் பாலிவுட் வர்த்தக நிபுணர்களால் கருதப்படுகிறது.
டெல்லி, பஞ்சாப் பகுதிகளில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லால் சிங் சித்தா திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனப் பார்வைகளைப் பெற்றாலும், ஆமீர்கான் கடந்த காலத்தில் தெரிவித்த கருத்திற்காக படம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக திரை விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல, வியாழக்கிழமை அக்ஷய் குமார் நடிப்பில் ஆனந்த் எல்.ராய் இயக்கிய படம் 'ரக்ஷா பந்தன்' வெளியானது. அண்ணன் - தங்கை பாசத்தை வலியுறுத்தும் குடும்பக் கதையை களமாக கொண்ட இப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ.7 கோடி முதல் 8 கோடி வரை இருக்கலாம் என உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டின் இதுவரை அக்ஷய் குமார் படங்களின் முதல் நாள் வசூல் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட்டில் இவ்விரு படங்களுமே எதிர்பார்க்காத ஒப்பனிங் பெறவில்லை என்றாலும், ஒப்பீட்டளவில் ‘லால் சிங் சத்தா’ வசூலில் முந்துவது தெளிவாகத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
33 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago