தமிழில் ரிமேக் செய்யப்படும் ஆலியா பட் திரைப்படம்

By செய்திப்பிரிவு

ஆலியா பட், ஷெபாலி ஷா மற்றும் விஜய் வர்மா நடிப்பில் சமீபத்தில் வெளியான பாலிவுட் திரைப்படம் 'டார்லிங்ஸ்'. ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிக்ஸில் படம் வெளிவந்தது. இத்திரைப்படம் மூலமாக ஆலியா பட் தயாரிப்பாளராகவும் இந்தி சினிமா உலகில் உருவெடுத்துளளார். ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து ஆலியா பட் இதனை தயாரித்திருந்தார். ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சிஓஓவும் கௌரவ் வர்மா இதனை உறுதிப்படுத்தியுள்ளார். "கதை அப்படியே இருக்கும். எனினும், தமிழ் தெலுங்கிற்கு ஏற்ப தேவையான அம்சத்தை கதையில் சேர்ப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

ஜாஸ்மீத் கே ரீன் என்பவர் இயக்கியுள்ள டார்லிங்ஸ் திரைப்படம் கணவனால் துன்புறுத்தலை எதிர்கொள்ளும் ஒரு பெண்ணின் கதையை பேசும் படமாக வரவேற்பை பெற்றுவருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்