கரோனா காரணமாக படத்தின் முக்கியமான காதல் ஃபிளாஷ்பேக் காட்சியை எடுக்க இயலவில்லை என்று ‘எண்ணித் துணிக’ படத்தின் இயக்குநர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் தெரிவித்தார்.
ஜெய் நடித்துள்ள ‘எண்ணித் துணிக’ படம் மூலம் இயக்குநர் ஆகி இருக்கிறார் எஸ்.கே.வெற்றிச்செல்வன். இயக்குநர் வசந்த்திடம் பல படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ள அவர், நீண்டப் போராட்டத்துக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். இதில், ஜெய், அதுல்யா, வம்சி கிருஷ்ணா, சுனில் ரெட்டி, அஞ்சலி நாயர் உட்பட பலர் நடித்துள்ளனர்.
சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். தினேஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரெயின் ஆஃப் ஆரோஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படம் பற்றி எஸ்.கே.வெற்றிச்செல்வன் கூறியதாவது:
இயக்குநர் வசந்த்திடம் இணை இயக்குநராகப் பணியாற்றினேன். ’எண்ணித் துணிக’ என் முதல் படம். ஆக்ஷன், சஸ்பென்ஸ் த்ரில்லர்கதை. கரோனா காரணமாக படம் தாமதமாகி விட்டது. அதனால் படத்தின் முக்கியமான காதல் காட்சியை படமாக்காமல் விட்டுவிட்டோம். ஜெய், அதுல்யா ரவியின் அந்த ஃபிளாஷ்பேக் காட்சி எடுக்கப்பட்டிருந்தால் காதல் காட்சி இன்னும் அழுத்தமாக இருந்திருக்கும்.
» ‘கடாவர்’ படம் வெளியாகக் கூடாது என பலரும் மறைமுகமாக உழைத்தனர்: அமலா பால்
» ‘விருமன்’ முதல் ‘லால் சிங் சத்தா’ வரை - கவனம் ஈர்க்கும் இந்த வார தியேட்டர் ரிலீஸ் படங்கள்
இப்போது படம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதன்திரைக்கதையை ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். வன்முறை,ஆபாசம் இல்லாததால் பெண்களுக்கு இந்தப் படம் பிடித்திருக்கிறது. ஹீரோ ஜெய், முழு ஒத்துழைப்புக் கொடுத்தார். என்னிடம் நெருங்கிய நண்பர் போல பழகினார். வழக்கமாக,படங்களின் புரமோஷன் விழாக்களுக்கு அவர் வருவதில்லைஎன்று சொல்வார்கள்.
இந்தப் படத்துக்கு அவருடைய ஒத்துழைப்பை மறக்க முடியாது. அடுத்து இரண்டுபெரிய நிறுவனங்களில் கதை சொல்லிஇருக்கிறேன். இன்னும் முடிவாக வில்லை. இவ்வாறு வெற்றிச் செல்வன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago