திரையில் மிஸ் செய்த இரண்டு படங்கள் - இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ்

By செய்திப்பிரிவு

திரையில் பார்க்கத்தவறிய இரண்டு படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ளது. அது என்னென்ன படங்கள் என்பது குறித்துப் பார்ப்போம்.

இயக்குநர் ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கத்தில் டாப்ஸி நடித்த படம் 'சபாஷ் மிது'. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பெண் கிரிக்கெட்டர் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்திய முயற்சி பார்வையாளர்களால் பாராட்டப்பட்டது.

படத்தில் டாப்ஸி மிதாலி ராஜாக நடித்திருந்தார். வியா காம் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் கடந்த ஜூலை 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் இப்படம் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி வூட் (voot) ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தப்படத்தை பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாஷ் மிது விமர்சனத்தைப் படிக்க : முதல் பார்வை | சபாஷ் மிது - இந்திய கிரிக்கெட் உலகின் இன்னொரு முகம்

இயக்குநர் விக்ரம் குமார் இயக்கத்தில் நாக சைதன்யா நடித்தப் படம் 'தேங்க்யூ'. தில் ராஜூ தயாரித்த இந்த தெலுங்குப்படம் கடந்த ஜூலை 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, தமன் இசையமைத்திருந்தார். ராஷீ கண்ணா, மாளவிகா நாயர், பிரகாஷ் ராஜ், ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் படம் நாளை (ஆகஸ்ட் 11) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்