செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா | தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய நடிகர் சிவகார்த்திகேயன் மகள்

By செய்திப்பிரிவு

சென்னை: செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நிறைவு விழா மேடையில் தமிழக முன்னாள் முதல்வர்களான ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான வரவேற்பு பாடலில் அணிந்து இருந்த கருப்பு உடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் டிரம்ஸ் சிவமணி, வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்தியா, கீ போர்டு ஸ்டீபன் தேவசி, புல்லாங்குழல் இசைக் கலைஞர் நவீன் ஆகியோர் இணைந்து பல பாடல்களை இசைத்தனர். குறிப்பாக, ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ பாடல் இந்த நான்கு கருவிகளில் இருந்து இசைக்கப்பட்டது பார்வையாளர்களை கவர்ந்தது.

அப்போது ட்ரம்ஸ் சிவமணி மேடையில் இருந்து கீழே வந்து முதல்வரை டிரம்ஸ் வாசிக்க அழைத்தார். இதை ஏற்றுக்கொண்டு மு.க.ஸ்டாலின், சிவமணியுடன் இணைந்து டிரம்ஸ் வாசித்தார்.

பின்னர், இசைக் கலைஞர் ஒருவர் பறந்து கொண்டே இருக்கும் பியோனாவில் "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா" பாடல் உள்ளிட்ட பாடல்களை இசைத்தார். மேலும் பறந்து கொண்டே படையாப்பா பாடலை டிரம்ஸ் இசைக் கலைஞர்கள் வாசித்தார்.

பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து போர்டு பிரிவில் பதக்கம் வழங்கப்பட்டது. 5 போர்டுகளில் ஓபன், பெண்கள் என்று 30 பதக்கம் வழங்கப்பட்டன. இதன்பிறகு கமல்ஹாசன் குரலில் சுதந்திர போராட்டம் மற்றும் சமூக நீதி வரலாறு குறித்த நிகழ்த்துக் கலை நடனம் அனைவரையும் வியக்க வைத்தது.

இதன்பின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது. அப்போது தமிழ்த்தாய் வாழ்த்தை சிறுமிகளுடன் இணைந்து பெண்களும் பாடினார். இந்த குழுவில் நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதானாவும் பங்கேற்று தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாடினார். இந்தக் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE