சென்னை: நடிகர் விக்ரமின் நடிப்பில் உருவாகி உள்ள ‘கோப்ரா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பல்வேறு முறை இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு, அதன் வெளியீடு தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.
டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் அஜய் ஞானமுத்து. இப்போது அவரது இயக்கத்தில் உருவாகி உள்ளது கோப்ரா. இந்த படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரித்துள்ளார்.
நடிகர்கள் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மிருணாளினி ரவி, மியா ஜார்ஜ், பத்மபிரியா, கே.எஸ்.ரவிக்குமார் என பலர் இதில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணியை ஹரிஷ் கண்ணன் மற்றும் படத்தொகுப்பு பணியை பவன் ஸ்ரீநிவாசன் மேற்கொண்டுள்ளனர்.
ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் இந்த படம் உருவாகி உள்ளதாக தெரிகிறது. படத்தின் சிங்கிள் பிக் படங்கள் கவனம் ஈர்த்துள்ளது. படத்தின் தமிழக திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழுக்கான சாட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சியும், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமத்தை சோனி LIV நிறுவனமும் பெற்றுள்ளது.
» செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: பறந்துகொண்டே பியோனா, டிரம்ஸ் வாசித்த இசைக் கலைஞர்கள்
» செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: டிரம்ஸ், வீணை, கீ போர்டு, புல்லாங்குழல் இணைந்து ஒலித்த பாடல்கள்
இந்நிலையில், இந்த படம் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாக உள்ளது. அன்றைய தினம் விநாயகர் சதுர்த்தி விழாவாகும். அதனை முன்னிட்டு படக்குழு இந்த படத்தை வெளியிடுவதாக தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago