‘அப்பு எக்ஸ்பிரஸ்’... புனித் ராஜ்குமார் நினைவாக ஆம்புலன்ஸ் நன்கொடை அளித்த பிரகாஷ்ராஜ்

By செய்திப்பிரிவு

மறைந்த கன்னட நடிகர் புனித்ராஜ்குமார் நினைவாக ஏழைகளுக்காக சேவை செய்துவரும் மருத்துவமனை ஒன்றுக்கு ஆம்புலன்ஸ் ஒன்றை நன்கொடையாக வழங்கினார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

கன்னட திரையுலகில் முக்கியமான நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவர், புகழப்பெற்ற நடிகர் ராஜ்குமாரின் இளைய மகனான இவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு இந்திய திரையுலகத்தையே உலுக்கியது.

இவர் இறுதியாக நடித்த கன்னட படமான 'ஜேம்ஸ்' திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் கண்ணீர்மல்க அவரது இறுதிப்படத்தை பார்த்தனர். நடிகர் மட்டுமல்லாமல், பாடகர்,தயாரிப்பாளர் என பல்வேறு முகங்களைக்கொண்ட புனித் ராஜ்குமார், 'அப்பு' எனச் செல்லமாக அழைக்கப்பட்டார்.

இந்நிலையில், அவரது நினைவாக நடிகர் பிரகாஷ் ராஜ், மைசூர் மிஷன் மருத்துவமனைக்கு இலவச ஆம்புலன்ஸ் ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த ஆம்புலன்ஸூக்கு 'அப்பு' என்ற புனித் ராஜ்குமாரின் அடைமொழி இணைக்கப்பட்டு, ‘அப்பு எக்ஸ்பிரஸ்’ என்று இந்த ஆம்புலன்ஸுக்கு பெயரிடப்பட்டுள்ளது.'கர்நாடக மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற ஆம்புலன்ஸ் சேவை செயல்பட வேண்டும் என்பது என் கனவு'' எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

47 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்