நானும் ‘வன்முறை தீர்வல்ல’ன்னுதான் சொல்றேன்: இயக்குநர் முத்தையா விரைவுப் பேட்டி

By செய்திப்பிரிவு

‘விருமன்’ படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் நிலையில், இயக்குநர் முத்தையாவுடன் உரையாடியதிலிருந்து...

‘விருமன்’ யார்?

“கூட்டுக் குடும்பம், பாசம், ரோஷம்னு இருக்கிற நம்ம கிராமத்து மக்களின் கதைகளைச் சொல்றது என் வழக்கம். எந்தவொரு உறவையும் மற்ற உறவுகள்கிட்ட விட்டுக் கொடுக்கக் கூடாது அப்படிங்கறதை மண்சார்ந்து சொல்ற படம் இது.

வாழ்க்கையில எல்லோருமே தவறு செய்றவங்கதான். ஆனா, அதை, சுத்தி இருக்கிறவங்க யாராவது சுட்டிக்காட்டணும். தப்புன்னு உணர வைக்கணும். அதுதான் நேர்மையான உறவா இருக்கும். அந்த நேர்மையை அழுத்தமாகப் பேசுறவன் ‘விருமன்’. தேனி மாவட்டக் கதைக்களம். அங்க அதிகமா புழங்கற குலசாமி பெயர், ‘விருமன்’. அதையே தலைப்பா வச்சிட்டேன்.”

இயக்குநர் ஷங்கருடைய மகள் அதிதி அறிமுகமாறாங்களே?

“எங்க குழுவை நம்பி அவங்க நடிக்க வந்ததே ‘விருமன்’ படத்துக்கு சிறப்பு. என் படங்கள்ல நாயகிக்கும் முக்கியத்துவம் இருக்கும். இந்தப் படத்துல தேன்மொழிங்கற கேரக்டர்ல நடிக்கிறாங்க அதிதி. தண்ணீர் கேன் போடற பொண்ணு. தன்னுடைய அக்கா வாழ்க்கை நல்லா இருக்கணுங்கறதுக்காக உழைச்சுட்டு இருக்கிற பொண்ணு. ஷங்கர் சார் மிகப்பெரிய இயக்குநர்.

அவர் மகள் கண்டிப்பா சொகுசாதான் வாழ்ந்திருப்பாங்க. இந்தப் படத்துக்காக, அவரை செருப்பே இல்லாம கூட்டிட்டுப் போயி, ட்ரை சைக்கிள் மிதிக்க வச்சு, தண்ணீர் கேனை தூக்க வச்சிருக்கோம். அறிமுக நடிகர் அப்படிங்கறதைத் தாண்டி அருமையா நடிச்சிருக்காங்க.”

உங்க படங்கள்ல வன்முறை அதிகம்னு விமர்சனம் இருக்கே...

“அப்படி சொல்ல முடியாது. முள்ளை முள்ளாலதான் எடுக்கணும்னு சொல்வாங்கள்ல, அப்படித்தான் அதைக் காண்பிக்கிறேன்.

புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தாதீங்கன்னு நேரடியா சொன்னா, யாரும் கேட்கறதில்லை. ‘புகை பிடிப்பது புற்றுநோயை' உண்டாக்கும்னு அதன் பாதிப்புகளைக் காட்டும்போது, ஒவ்வொருத்தருக்கும் ஒரு பீதி வருதில்ல. அப்படித்தான் நானும் ‘வன்முறை தீர்வல்லன்னு' சொல்றேன். அதைச் சொல்றதுக்கு சில காட்சிகளை அப்படி வைக்க வேண்டியிருக்கு. ‘விருமன்’ படத்துல வன்முறை இருக்காது.”

> இது, செ.ஏக்நாத்ராஜ் எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE