“அடுத்தப் பட அறிவிப்புடன் வருகிறேன்” - சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகிய லோகேஷ்

By செய்திப்பிரிவு

'விக்ரம்' படம் இயக்குநர் லோகேஷ் கனகராஜை இந்திய அளவில் அடையாளப்படுத்தியுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜயுடன் லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணைகிறார். 'விஜய் 61' என அழைக்கப்படும் அப்படத்திற்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அக்டோபர் மாதம் 'விஜய் 61' படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாக உள்ள இப்படத்திற்கான படப்பிடிப்பு மும்பையில் நடைபெற உள்ளது.

இதனிடையே சமூக வலைதளங்களில் இருந்து சில நாட்கள் விலகி இருக்கப் போவதாக அறிவித்துள்ளார் லோகேஷ். தனது வலைதள பக்கத்தில் இன்று இதை பதிவிட்டவர், "நான் அனைத்து சமூக ஊடக தளங்களில் இருந்து சிறிது பிரேக் எடுத்துக்கொள்ள நினைக்கிறேன். எனது அடுத்த படத்தின் அறிவிப்புடன் நான் விரைவில் திரும்பி வருவேன். அதுவரை அனைவரையும் பார்த்துக்கொள்ளுங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

'விஜய் 61' படத்திற்கான எழுத்து வேலைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளார் லோகேஷ். அதில் கவனம் செலுத்துவதற்காக சமூக வலைதளங்களில் இருந்து சிறிதுகாலம் விலகி இருக்க முடிவு செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்