'பொன்னியின் செல்வன் பாகம் 1' படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான், பாம்பா பாக்யா இணைந்து பாடிய 'பொன்னி நதி' பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், த்ரிஷா,ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம்ரவி, நடித்த திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசிய நடிகர் கார்த்தி, ''நடிகர் ஜெயராம் படத்தில் முக்கியமான அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் படத்தில் ஒரு விஷயம் செய்துள்ளார்.
படம் பார்க்கும்போது உங்களுக்கு அது புரியும். படத்தை எப்படி முடிக்க முடியும் என யோசித்துக்கொண்டிருந்தோம். மணிரத்னம் 120 நாட்களில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களையும் எடுத்து முடித்துவிட்டார். யாரும் அதை நம்மமாட்டார்கள். விடியற்காலை 2.30 மணிக்கு மேக்அப் போடுவோம். எங்களுக்கு மேக்அப் போட 30 பேர் தயாராக இருப்பார்கள். யாரும் தூங்க மாட்டார்கள்.
» ஒரே நேரத்தில் 3000 புகைப்படக் கலைஞர்களால் கிளிக் - ரோஜா கின்னஸ் சாதனை
» மோகன்லால் இயக்கத்தில் 3டியில் உருவாகும் பரோஸ் - படப்பிடிப்பு நிறைவு
காலையில் 6.30 மணிக்கு முதல் ஷாட் எடுப்போம். நாவலை படித்துவிட்டு கற்பனையில் ஷூட்டிங் ஸ்பார்ட்டுக்கு சென்றால் மணிரத்னம் அதை வேறு மாதிரி தரமாக உருவாக்கி வைத்திருப்பார். இப்படியொரு படம் எடுப்பதற்கு ஒரு இயக்குநர் பிறந்துதான் வர வேண்டும். 10 வருடமாவது ஆகும் இப்படியொரு படத்தை யோசித்து பார்ப்பதற்கு, மணிரத்னம் மட்டும் தான் இப்படியொரு படத்தை இயக்க முடியும்'' என்றார்.
'பொன்னி நதி' என்ற இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பாடகர் பாம்பா பாக்யா பாடியுள்ளார். இளங்கோ கிருஷ்ணன் பாடலை எழுதியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
56 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago