ரஜினியின் காலைத் தொட்டு ஆசி வாங்கிய மாதவன் - வைரலாகும் வீடியோ

By செய்திப்பிரிவு

நடிகர் மாதவன், நடிகர் ரஜினிகாந்தின் காலைத் தொட்டு ஆசி வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு மாதவன் இயக்கியிருந்த படம் 'ராக்கெட்ரி தி நம்பி விளைவு'.

மாதவன் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல், நம்பி நாராயணனாக அவரே நடித்திருந்தார். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக மாதவன் அறிமுகமானார். தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி மொழிகளில் ஜூன் 1ம் தேதி இப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதன் தமிழ்ப் பதிப்பில் சூர்யாவும், இந்திப் பதிப்பில் ஷாருக்கானும் கவுரவ வேடத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தைத் திரைப்படத்துறையினரும் பாராட்டி இருந்தனர்.

முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் படத்தைப் பார்த்து மாதவனுக்கு பாராட்டைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ராக்கெட்ரி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மாதவன், நடிகர் ரஜினிகாந்தை அவர் இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்ற வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பில் விஞ்ஞானி நம்பி நாராயணனும் உடனிருந்தார்.

அந்த வீடியோவில், நடிகர் மாதவனுக்கு ரஜினிகாந்த் சால்வை அணிவித்துப் பாராட்டுகிறார். தொடர்ந்து ரஜினியின் காலில் விழுந்து ஆசி வாங்குகிறார் மாதவன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்