“நமக்குப் பிடிச்சவங்க ஒரு தப்பு பண்ணிட்டா...” - அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகி உள்ள 'குருதி ஆட்டம்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. சுமார் 2.57 நிமிடங்கள் ஓடும் இந்த ட்ரெய்லரில் ஃப்ரேமில் தெரியும் அனைத்து நடிகர்களும் கவனம் ஈர்க்கின்றனர்.

இந்தப் படத்தை இயக்குனர் ஸ்ரீகணேஷ் எழுதி, இயக்கியுள்ளார். இவர் ‘8 தோட்டாக்கள்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராக் ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் பேனரில் டி.முருகானந்தம் தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அனில் கிரிஷ் படத்தொகுப்பு பணிகளை செய்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.

அதர்வாவுடன் பிரியா பவானி சங்கர், ராதா ரவி, ராதிகா சரத்குமார், வட்சன் சக்கரவர்த்தி, வினோத் சாகர் போன்றவர்கள் நடித்துள்ளனர். கபடி விளையாட்டை பின்னணியாக கொண்டு இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

வரும் ஆகஸ்ட் 5 முதல் இந்த திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார். அதோடு தனது ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவிற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

“நமக்குப் பிடிச்சவங்க ஒரு தப்பு பண்ணிட்டா...” என அந்தக் குழந்தை கேட்கும் கேள்வி உள்பட வசனங்கள் ஈர்க்கின்றன. காட்சிக்குக் காட்சி உணர்ச்சிகளும் ஆவேசமும் தெறிக்கின்றன.

ட்ரெய்லரை பார்பபதற்கான வீடியோ லிங்க்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்