கவனம் ஈர்க்கும் ‘குலுகுலு’ படத்தின் 3 நிமிட ஸ்னீக் பீக் காட்சி

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் சந்தானத்தின் ‘குலுகுலு’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகி உள்ளது. இந்தக் காட்சி இந்தியாவில் தினந்தோறும் பெரும்பாலான சாலை ஓரங்களில் நடைபெறும் நிஜத்தை பிரதிபலிக்கும் வகையில் யதார்த்தமாக உள்ளது.

நகைச்சுவை நடிகராக நடித்து வந்த நடிகர் சந்தானம் கதையின் பிரதான நாயகனாக இப்போது நடித்து வருகிறார். அவரது நடிப்பில் உருவாகி உள்ள 'குலுகுலு' திரைப்படத்தை இயக்குனர் ரத்ன குமார் இயக்கி உள்ளார். இவர் மேயாத மான், ஆடை போன்ற படங்களை இயக்கியவர். அது தவிர மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற படங்களின் திரைக்கதையிலும் பணியாற்றி உள்ளார்.

'குலுகுலு' திரைப்படம் ஒரு பயணத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது. சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் எஸ். ராஜ் நாராயணன் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி பெற்றுள்ளது. இந்தப் படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ளது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ். வரும் 29-ம் தேதி திரைக்கு வருகிறது இந்தப் படம்.

இந்நிலையில், படத்தில் இடம் பெற்றுள்ள மூன்று நிமிட காட்சியை வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் சாலையோரத்தில் உணவு சாப்பிடும் சந்தானம், யாசகம் கேட்டு வரும் ஒரு பெண்ணுக்கு உதவுகிறார்.

இந்த காட்சிக்கான வீடியோ லிங்க்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்