உதயநிதியின் ‘கலகத் தலைவன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'கலகத் தலைவன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் கடந்த மே மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 'ஆர்டிக்கள் 15' இந்தி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து மாரிசெல்வராஜ் இயக்கத்தில் 'மாமன்னன்' படத்தில் நடித்து வருகிறார் உதயநிதி.

இந்நிலையில், தற்போது, 'மீகாமன்', 'தடம்' படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனியுடன் கைகோத்திருக்கிறார். இந்தப் படத்திற்கு, 'கலகத் தலைவன்' என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார்.

படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபர்ஸ்ட்லுக் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

58 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

மேலும்