மாநிலங்களவை நியமன உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார் இளையராஜா

By செய்திப்பிரிவு

சென்னை: மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா இன்று பதவியேற்றுக் கொண்டார்.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள், குடியரசுத் தலைவரால் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். அந்த வகையில், இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, திரைக்கதை எழுத்தாளர் வி.விஜயேந்திர பிரசாத், வீரேந்திர ஹெக்டே ஆகியோர் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். ஆனால், இளையராஜா இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்ததால் அவரால் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து, கடந்த 19-ம் தேதி சென்னை திரும்பினார் இளையராஜா. இந்நிலையில், இன்று மாநிலங்களவை எம்.பி.யாக இளையராஜா பதவியேற்றுக் கொண்டார். தமிழில் பதவியேற்றுக் கொண்ட அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் மேஜையை தட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

வீடியோவைக் காண :

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்