நயன்தாரா நம்பர் ஒன் நடிகை என என்னுடையே லிஸ்டில் குறிப்பிடவில்லை என கரண்ஜோஹர் தெரிவித்திருப்பது, நயன்தாரா ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
அண்மையில் நடிகை சமந்தா, பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் நடத்தும் 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் நடிகர் அக்ஷய்குமார் கலந்துகொண்டார். இது தொடர்பாக வெளியான ப்ரோமோ வீடியோவில் சமந்தாவை அக்ஷய்குமார் தூக்கி செல்வது போன்ற காட்சிகள் இடம்பிடித்தன. இந்நிலையில், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சமந்தாவிடம் கரண் ஜோஹர், ''தென்னிந்திய சினிமாவில் யார் முன்னணி நடிகை ?' என்று நினைக்கிறீர்கள்? என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த சமந்தா, 'இப்போதுதான் நயன்தாராவுடன் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்தேன்'' என்றார். அவரது இந்த பதில் மூலம் நயன்தாரா தான் முன்னணி நடிகை என்று சமந்தா குறிப்பிட்டார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளரான கரண் ஜோஹர், 'என் லிஸ்டில் அப்படி இல்லையே?' என்று கூறிவிட்டு ஓர்மேக்ஸ் மீடியா கருத்துக்கணிப்பில் சமந்தாதான் நம்பர் ஒன் நடிகை என்று இருப்பதைக் குறிப்பிட்டார். இதையடுத்து நயன்தாரா ரசிகர்கள், கரண் ஜோஹருக்கு எதிரான சமூக வலைதளங்களில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago