திருமணம் குறித்து வெளியான தகவல்களை மறுத்துள்ளார் நடிகை நித்யா மேனன்.
தமிழில் ‘காஞ்சனா 2’, ‘ஓ காதல் கண்மணி’, ‘24’, ‘இருமுகன்’, ‘மெர்சல்’, ‘சைக்கோ’உட்பட பல படங்களில் நடித்துள்ள நித்யாமேனன், இப்போது தனுஷுடன் ’திருச்சிற்றம்பலம்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
மலையாளத்தில் அவர் நடித்துள்ள ‘ஆறாம் திருகல்பனா’ படத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. இதன் பிறகு, புதிய படங்களில் அவர் ஒப்பந்தமாகவில்லை. இதனால் அவர் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நித்யாமேனன், பிரபல மலையாள கதாநாயகன் ஒருவரை காதலித்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், இவற்றை மறுத்துள்ளார் நித்யா மேனன்.
இதுதொடர்பாக மலையாள ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நித்யா மேனன் திருமண தகவலை மறுத்துள்ளார். "சமூக வலைதளங்களில் பரவி வரும் திருமண தகவலில் உண்மை இல்லை. இதுபோன்ற தகவல்களை வெளியிடும்முன் ஊடகங்கள் அதை சரி பார்க்க வேண்டும். அதற்கு ஊடகங்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். எனது வேலையிலேயே இப்போது முழுக்கவனமும் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
30 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago