‘தி கிரே மேன்’ படத்தில் கொடூர கொலைகாரனாக தனுஷ் நடித்துள்ளார். தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம் ‘தி கிரே மேன்’ படத்தை ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ சகோதரர்கள் இயக்கியுள்ளனர். படத்தில் ரியான் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ், அனா டி அர்மாஸ், ஜெசிக்கா ஹென்விக் உள்ளிட்ட ஹாலிவுட் நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் 22-ம் தேதி வெளியாக உள்ளது.
சமீபத்தில் வெளியான இதன் டீஸர், ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் தனுஷ் கதாபாத்திரத்தை ‘கொலைகார இயந்திரம்’ என்று வர்ணிக்கின்றனர்.
இதுபற்றி தனுஷ் கூறும்போது, ‘’எப்போதுமே, மோசமானவனாக நடிப்பது ஜாலியாக இருக்கும். இதில் எனது ‘அவிக் சான்’ என்ற கதாபாத்திரத்துக்காக இயக்குநர்கள் அருமையான பின்னணி களத்தை அமைத்துள்ளனர். ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்த அவிக் சான் எப்படி கொடூரமான கொலைகாரன் ஆகிறான் என்று கதை செல்லும். அவனுக்கென சில நேர்மைகள் இருக்கின்றன. அவன் அநாவசியமாக யாரையும் கொல்ல விரும்புவது இல்லை. அவனை பொருத்தவரை, அவன் மரியாதைக்குரிய மனிதன்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
48 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago