“மூன்றாம் பாகத்துக்கு தயாராக இருங்கள்” - புஷ்பா படம் குறித்து ஃபஹத் பாசில் தகவல்

By செய்திப்பிரிவு

புஷ்பா திரைப்படத்தின் மூன்றாம் பாகம் வெளிவர வாய்ப்பு இருப்பதாக நடிகர் ஃபஹத் பாசில் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து பான் இந்தியா திரைப்படமாக வெளியானது 'புஷ்பா'. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்த இந்தப் படத்தில் ஃபஹத் பாசில் கன்னட நடிகர் தனஞ்செயா, சுனில், அஜய் கோஷ், ராவ் ரமேஷ், மைம் கோபி, பிரம்மாஜி உட்பட பலர் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரித்த இந்தப்படத்தில், 'ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடியிருந்தார்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் படல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தன. தெலுங்கு தவிர, தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியான இந்தப் படம் அனைத்துப் பகுதியிலும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், 'புஷ்பா' படத்தின் இரண்டாம் பாகம் வெளிநாடுகளை பின்னணியாக கொண்டு பிரமாண்டமாக உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல்வாரம் தொடங்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், புஷ்பா 3ம் பாகம் வெளிவரும் என நடிகர் ஃபஹத் பாசில் தெரிவித்துள்ளார். தனது நடிப்பில் வெளியாக இருக்கும் 'மலையன்குஞ்சு' பட புரோமோஷன் நேர்காணலில் பேசிய அவர் இந்த தகவலை வெளிப்படுத்தினார். அதில், "நெட்ஃபிளிக்ஸில் வெப் சீரிஸாகவே புஷ்பா படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார் இயக்குநர் சுகுமார். அதேபோல் புஷ்பா கதையை என்னிடம் சுகுமார் சொல்லும்போது இரண்டாம் பாகம் இயக்கும் எண்ணம் அவரிடம் இல்லை.

போலீஸ் ஸ்டேஷன் காட்சியை எடுக்கும்போதுதான் என்னை வைத்து புஷ்பா இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணம் அவருக்கு வந்துள்ளது. மிகச் சமீபத்தில் அவரிடம் பேசும்போதுதான் படத்தின் மூன்றாம் பாகத்துக்கு தயாராக இருக்க சொன்னார். நிறைய விஷயங்கள் படத்தில் சொல்லவேண்டி இருப்பதால் மூன்றாம் பாகம் நிச்சயம் வர வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்