பா.ரஞ்சித் இயக்கும் 'விக்ரம் 61' படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'பொன்னியின் செல்வன்', 'கோப்ரா' படங்களைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் நடிகர் விக்ரம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் அண்மையில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் பா.ரஞ்சித்துடன் முதன் முறையாக இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் இணைகிறார்.
படம் குறித்து பா.ரஞ்சித் கூறுகையில், ''விக்ரமுடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வமாக இருக்கிறேன். மக்களிடையேயும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். 19-ம் நூற்றாண்டில் கே.ஜி.எஃப்-பில் நடந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட உள்ளது. அந்த மக்களின் வாழ்க்கையை பேசும் படமாக இது இருக்கும்.
» கும்பளங்கி நைட்ஸ் படத்தில் என் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிப்பதாக இருந்தது - ஃபஹத் பாசில்
» சென்னை திரும்பிய இளையராஜா விரைவில் மாநிலங்களவை நியமன உறுப்பினராக பதவியேற்பு
படம் எடுப்பது மிகப் பெரிய சவால். எனக்கு மட்டுமில்லாமல், தொழில்நுட்ப குழுவுக்கும் இது மிகப் பெரிய சவாலாக இருக்கும். ஜி.வி.பிரகாஷுடன் முதன்முறையாக இணைகிறேன். மற்ற நடிகர் நடிகைகளின் அறிவிப்பு விரைவில் வெளியாகும்'' எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், இப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வரலாம் என கூறப்படுகிறது.
இதனிடையே விஜய் நடிப்பில் தமிழ், தெலுங்குவில் உருவாகும், 'வாரிசு' படத்தில் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago