பா.ரஞ்சித், வெங்கட்பிரபு, சிம்புதேவன், எம்.ராஜேஷ் ஆகியோர் இயக்கியுள்ள 'விக்டிம்' ஆந்தாலஜி ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
வெங்கட்பிரபுவின் ப்ளாக் டிக்கெட் கம்பெனி மற்றும் ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி இணைந்து புதிய ஆந்தாலஜி ஒன்றை தயாரித்துள்ளது. இதில், இயக்குநர் எம்.ராஜேஷ், 'மிரேஜ்' கதையையும், 'கொட்டை பாக்கு வத்தலும்' என்ற கதையை இயக்குநர் சிம்பு தேவனும், பா.ரஞ்சித், 'தம்மம்' மற்றும் வெங்கட்பிரபு 'கன்ஃபெஷன்' ஆகிய கதைகளை இயக்கியுள்ளனர். ஒரே கதைக்கரு அதாவது பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்தி இந்த நான்கு கதைகளும் சொல்லப்படுகின்றன.
இதில், அமலாபால், பிரியா பவானி ஷங்கர், குரு சோமசுந்தரம், பிரசன்னா, நட்டி, தம்பி ராமையா, கலையரசன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 5-ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள இந்த ஆந்தாலஜியின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
ட்ரெய்லரை பொறுத்தவரை, இயக்குநர் ஒவ்வொருவரும் தங்களுக்கே உரிய பாணியில் கதைகளை இயக்கியிருப்பதை உணர முடிகிறது. சிம்பு தேவன் தனக்கே உரிய பேண்டஸி பாணியில் கதையை இயக்கியிருக்கிறார்.
» 2022-ல் இதுவரையிலான IMDb ரேட்டிங்கின் டாப் 10 இந்தியப் படங்களில் ‘விக்ரம்’ முதலிடம்
» ஓடிடியால் பாதிப்பு - ஆகஸ்ட் 1 முதல் முடங்கும் தெலுங்கு சினிமா படப்பிடிப்புகள்
நிலத்தை மையப்படுத்திய எளிய மக்களின் கதை பா.ரஞ்சித்தும், ராஜேஷ் மற்றும் வெங்கட்பிரபு க்ரைம் த்ரில்லர் பாணியிலான கதையை இயக்கியிருப்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. 4 கதைகளிலும் உள்ள பலமான காஸ்டிங்கும், ட்ரெய்லரின் காட்சிகளும் ஆந்தாலஜி மீதான ஆர்வத்தை தூண்டுகின்றன.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago