2022-ல் இதுவரையிலான IMDb ரேட்டிங்கின் டாப் 10 இந்தியப் படங்களில் ‘விக்ரம்’ முதலிடம் 

By கலிலுல்லா

2022 ஜனவரி முதல் ஜூலை வரை வெளியான இந்தியப் படங்களில் ஐஎம்டிபி ரேட்டிங்கில் கமலின் ‘விக்ரம்’ திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது. அந்த வகையில், முதல் 10 படங்களில் பட்டியலைப் பார்ப்போம்.

'விக்ரம்' - ஐஎம்டிபி ரேட்டிங் (8.6) ஓடிடி தளம் | ஹாட்ஸ்டார்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா நடிப்பில் கடந்த ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது 'விக்ரம்'. போதைப்பொருள் கடத்தல் தொடர்பான கதையைக் கொண்ட இப்படம் ஹாட்ஸ்டாரில் காணக்கிடைகிறது. இப்படத்திற்கு ஐஎம்டிபி ரேட்டிங் 8.6 கொடுக்கப்பட்டுள்ளது.

'கேஜிஎஃப் சேப்டர் 2' - ஐஎம்டிபி ரேட்டிங் (8.5) ஓடிடி தளம் | அமேசான் ப்ரைம்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்த 'கேஜிஎஃப்' முதல் பாகம் வெற்றி பெற்றதையடுத்து, கடந்த ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது 'கேஜிஎஃப் சேப்டர் 2'.

பான் இந்தியா முறையில் வெளியான இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்திற்கு 8.5 ஐஎம்டிபி ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் - ஐஎம்டிபி ரேட்டிங் (8.3) ஓடிடி தளம் | ஜீ5

விவேக் அக்னிஹோத்ரியின் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படம் வெளியானதும் நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. அனுபம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, தர்ஷன் குமார், பல்லவி ஜோஷி மற்றும் சின்மய் மாண்ட்லேகர் ஆகியோர் நடிப்பில் 80களின் பிற்பகுதியிலும் 90களிலும் இருந்த காஷ்மீரி பண்டிட்டுகளின் கதையை படம் விவரிக்கின்றது.

படம் கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஐஎம்டிபி ரேட்டிங் 8.3.


ஹிருதயம் (மலையாளம்) - ஐஎம்டிபி ரேட்டிங் (8.1) ஓடிடி தளம் | ஹாட்ஸ்டார்

ஜனவரி 21-ம் தேதி வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியானது 'ஹிருதயம்'. படத்தில் மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.ஐஎம்டிபி ரேட்டிங் 8.1 வழங்கப்பட்டுள்ளது.

ஆர்ஆர்ஆர் - ஐஎம்டிபி ரேட்டிங் (8.0) ஓடிடி தளம் | நெட்ஃப்ளிக்ஸ்

ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜீனியர் என்டிஆர் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியாகி உலக அளவில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்தது இப்படம்.

கடந்த மார்ச் 24-ம் தேதி வெளியான இப்படத்தில் அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணக்கிடைக்கும் இப்படத்திற்கு 8.0 ஐஎம்டிபி ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது.

ஏ தேர்ஸ்ட் டே (இந்தி) (A Thursday) - ஐஎம்டிபி ரேட்டிங் (7.8) ஓடிடி தளம் | ஹாட்ஸ்டார்

யாமி கௌதம் நடிப்பில் பெஹ்சாத் கம்பாட்டா இயக்கிய மற்றும் ரோனி ஸ்க்ரூவாலா தயாரித்த இப்படம் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி வெளியானது.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் காணக்கிடைக்கும் இந்த இந்திப்படத்திற்கு ஐஎம்டிபி ரேட்டிங் 7.8 கொடுக்கப்பட்டுள்ளது.

ஜுண்ட் (இந்தி) - ஐஎம்டிபி ரேட்டிங் (7.4) | ஓடிடி தளம் | ஜீ5

நாகராஜ் மஞ்சுளேவின் ஸ்போர்ட்ஸ் ட்ராமாவாக உருவான இப்படத்தில் அமிதாப் பச்சன் நடித்திருந்தார்.

படம் கடந்த மார்ச் 4-ம் தேதி வெளியானது. தற்போது ஜீ5 தளத்தில் காணக்கிடைக்கிறது. படத்திற்கு 7.4 ஐஎம்டிபி ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.

ரன்வே 34 : ஐஎம்டிபி ரேட்டிங் (7.1) - ஓடிடி தளம் | அமேசான் பிரைம்

அஜய் தேவ்கன் மற்றும் அமிதாப் பச்சன் தலைமையிலான 'ரன்வே 34' திரைப்படம் கோர்ட் ரூம் ட்ராமாவாக கடந்த ஏப்ரல் மாதம் 29-ம் தேதி வெளியானது.

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கும் இப்படத்திற்கு 7.2 ஐஎம்டிபி ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது.

கங்குபாய் கதியவாடி - ஐஎம்டிபி ரேட்டிங் (7.0) ஓடிடி தளம் | நெட்ஃப்ளிக்ஸ்

ஆலியா பட் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 25-ம் தேதி வெளியான இப்படத்தில் அஜய் தேவ்கன், விஜய் ராஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பாலியல் தொழிலாளிகள் குறித்த கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணக்கிடைக்கிறது. படத்திற்கு 7.0 ஐஎம்டிபி ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது.

சாம்ராட் பிருத்விராஜ் - ஐஎம்டிபி ரேட்டிங் (6.9) | ஓடிடி தளம் | அமேசான் பிரைம்

அக்சய்குமார் நடிப்பில் வரலாற்று கதையை தழுவி உருவான இப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்த இப்படம் அமேசான் பிரைம் தளத்தில் காணக்கிடைக்கிறது. 6.9 ஐஎம்டிபி ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்