அஜித்தின் 'ஏகே61' படத்தில் தெலுங்கு வில்லன் நடிகர் இணைந்துள்ளார்.
'வலிமை' படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத்துடன் கைகோத்துள்ளார். இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படம் 'ஏகே61' என அழைக்கப்படுகிறது. அஜித் ஜோடியாக, மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். அவர் தவிர 'சார்பட்டா பரம்பரை' படத்தில் கலக்கிய ஜான் கொக்கென், வீரா, யோகிபாபு, மகாநதி சங்கர் போன்ற பலர் நடிக்கின்றனர்.
படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இப்போது ஹைதராபாத் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துவருகிறது. அடுத்ததாக புனேவில் படப்பிடிப்பு நடக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனிடையே, இந்தப் படத்தில் தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்து புகழ்பெற்ற அஜய் இணைந்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
» நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கரோனா தொற்று
» சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் கவுண்டமணி? - மாவீரன் பட அப்டேட்
சமீபத்தில் வெளியான ’தி வாரியர்’ உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர் இந்த அஜய். இவர் அஜித் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதனிடையே, நடிகர் அஜித் தற்போது ஐரோப்பா சுற்றுப்பயணத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago