'தமிழ் ராக்கர்ஸ்' இணையதொடர் குறித்து பேசிய நடிகர் அருண் விஜய், "பைரஸி திருட்டானது பொழுதுபோக்கு துறையில் ஒரு நிலையான போராக இருந்து வருகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இணைய தொடர் 'தமிழ் ராக்கர்ஸ்'. இந்த தொடரை, மனோஜ் குமார் கலைவாணன் எழுத, பு ஏவிஎம் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பைரஸி சைபர் க்ரைம் பின்னால் இருக்கும் இருள் பக்கங்களை காட்சிப்படுத்தும் ஒரு க்ரைம் தொடரான இது ஆகஸ்ட் 19-ம் தேதி சோனி லைவ் லிவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
அருண் விஜய் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்த தொடரில் நடிகை வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், வினோதினி வைத்தியநாதன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இத்தொடர் குறித்து நடிகர் அருண் விஜய் கூறுகையில், "பைரஸி திருட்டானது பொழுதுபோக்கு துறையில் ஒரு நிலையான போராக இருந்து வருகிறது. டிஜிட்டல் முன்னேற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் வேகமாக வளர்ந்து வரும் உலகில், திருட்டும் புதிய வடிவங்களை எடுத்துள்ளது. இந்த தொடர் இந்த போரை, அதன் பின்னணியை அற்புதமான விவரங்களோடு சித்தரிக்கிறது. ருத்ரா போன்ற ஒரு கதாபாத்திரம் கிடைப்பது அரிது.
» உருவாகிறது சூர்யாவின் 24 படத்தின் இரண்டாம் பாகம்
» தனுஷ் ஒரு நம்ப முடியாத சிறந்த நடிகர் - தி கிரே மேன் பட நடிகர் ரியான் காஸ்லிங் பாராட்டு
இப்பாத்திரம் எனக்கு கிடைத்து மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தொடரின் மையம் தனித்தன்மை வாய்ந்தது, தற்போதைய சூழ்நிலைக்கு இது மிகவும் பொருத்தமான ஒன்றாகும். இயக்குநர் அறிவழகன் மற்றும் ஏவிஎம் புரடக்சனுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago