தனுஷ் ஒரு நம்ப முடியாத சிறந்த நடிகர் - தி கிரே மேன் பட நடிகர் ரியான் காஸ்லிங் பாராட்டு

By செய்திப்பிரிவு

தனுஷ் ஒரு நம்ப முடியாத சிறந்த நடிகர் என்று 'தி கிரே மேன்' பட ஹாலிவுட் நடிகர் ரியான் காஸ்லிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கேப்டன் அமெரிக்கா, அவெஞ்சர்ஸ் போன்ற படங்களை இயக்கியதற்காக பொதுவெளியில் பரவலாக அறியப்படுபவர்கள் ஜோ ருஸ்ஸோ, அந்தோனி ருஸ்ஸோ. இவர்கள் இருவரும் சகோதரர்கள். 'ருஸ்ஸோ சகோதரர்கள்' என இவர்கள் பிரபலமாக அறியப்படுகிறார்கள்.

கடந்த 2009-இல் வெளியான 'தி கிரே மேன்' நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் ஒரு படம் இயக்கி முடித்துள்ளனர். விரைவில் இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

த்ரில்லர் ஜானரில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இதில் முதன்மைக் கதாபாத்திரங்களில் ரையான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். முக்கியமாக இதில் நடிகர் தனுஷும் நடித்துள்ளார்.இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து தனுஷ், "இந்தப் படம் ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் போன்றதாகும். இதில் ஆக்‌ஷன், டிராமா, வேகம், பெரிய சேஸ் என பலவிதமான அம்சங்கள் உள்ளன.

அற்புதமான நடிகர்களும், கலைஞர்களும் நிறைந்த இந்தப் படத்தில் ஒரு அடக்கமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் அவிக் சான் (Avik San) எனும் பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 22-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான இதன் டீசர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இதில் தனுஷுடன் நடித்துள்ள ரியான் காஸ்லிங், அவர் நடிப்பைப் பாராட்டியுள்ளார். அவர் கூறும்போது, ''தனுஷ் நம்ப முடியாத, சிறந்த நடிகர். நாங்கள் சண்டைக் காட்சியை படமாக்கியபோது, அவர் தவறே செய்யவில்லை. அதை பலமுறை ரீஷூட் செய்தபோதும் தனுஷ் தவறு செய்யவில்லை. அவர் மிகவும் வேடிக்கையானவர். எனக்கு அவரைப் பிடித்துவிட்டதால் எதிரியாகவோ அல்லது வேறு ஏதாவாகவோ நடிப்பது கடினமாக இருந்தது'' என்று தெரிவித்துள்ளார்.

''நாங்கள் அவருக்கு தீவிர ரசிகர்களாக மாறிவிட்டோம். அவரை மனதில் வைத்துதான் அந்த கேரக்டரை உருவாக்கினோம். உலகின் சிறந்த கொலையாளிகளில் ஒருவராக அவர் நடிக்கிறார். இதில் இரண்டு பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கின்றன’’என்று படத்தின் இயக்குநர்களான ரூஸோ சகோதரர்களும் அவரைப் பாராட்டியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்