சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டான்' திரைப்படம் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் 'ப்ரின்ஸ்' படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதனை அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் 'எஸ்.கே 21' படத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ள இப்படத்தில் சாய் பல்லவி நடிக்கிறார். இதனிடையே, 'மண்டேலா' படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'மாவீரன்'.
» “குழந்தை மனம் கொண்டவர் பிரதாப் போத்தன்” - திரையுலகம் புகழஞ்சலி
» பிரதாப் போத்தன் எழுதிய கடைசிப் பதிவும், வியத்தகு தனித்துவமும்: நெட்டிசன்களின் அஞ்சலிக் குறிப்புகள்
அருண் விஸ்வா தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு தெலுங்கில் 'மகாவீருடு' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளோம் என படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் கோபமான லுக்கில் காட்சியளிக்கிறார் சிவகார்த்திகேயன்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago