திரையரங்கம் மட்டுமல்ல ஓடிடியிலும் மாஸ் காட்டிய விக்ரம் 

By செய்திப்பிரிவு

கடந்த ஜூலை 8-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் ஓடிடி வெளியீட்டிலும் புதிய சாதனை படைத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா நடித்த படம் 'விக்ரம்'. கடந்த மாதம் ஜூன் மாதம் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ்நாட்டில் மட்டும் படத்தின் வசூல் ரூ.150 கோடியை தாண்டியுள்ளது.

இதன்மூலம் தமிழ்நாட்டில் அதிக வசூலைக் கண்ட தமிழ்ப் படம் என்கிற பெருமையையும் பெற்றுள்ளது. மேலும், இந்தியாவில் மட்டும் இதன் வசூல் ரூ. 300 கோடியைத் தாண்டியுள்ளது. உலக அளவில் 'விக்ரம்' 400 கோடிக்கும் அதிமான வசூலை குவித்து, கமல்ஹாசன் நடித்த படங்களிலேயே பெரும் வசூல் சாதனை படைத்த படமாக மாறியிருக்கிறது 'விக்ரம்'. படம் வெளியாகி ஒருமாதம் கழித்து கடந்த வாரம் தான் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. படத்தின் ஓடிடியின் வெளியீட்டுக்காக காத்திருந்த பலரும், ஓடிடியில் வெளியான இரவே படத்தை பார்த்தனர்.

அந்த வகையில் திரையரங்குகளில் வசூல் சாதனை நிகழ்த்திய இப்படம், ஓடிடி வெளியீட்டிலும் புதிய சாதனை படைத்துள்ளது. டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வார இறுதியில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டது, அதிக சந்தாதாரர்களை ஈர்த்தது, அதிக நேரம் பார்த்தது என மூன்று சாதனைகளை 'விக்ரம்' படம் நிகழ்த்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்