பா.ரஞ்சித் இயக்கியுள்ள 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படம் தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்த படமாக உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் தமிழின் முதல் தன்பாலின ஈர்ப்பாளர்கள் சினிமா என்ற பெருமையை இப்படம் பெறும் எனக் கூறப்படுகிறது.
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராமன் நடிக்கும் திரைப்படம் 'நட்சத்திரம் நகர்கிறது'. இந்தப் படத்தில் நாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். இவர்களுடன், 'டான்சிங் ரோஸ்' ஷபீர், கலையரசன் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். கிஷோர் குமார் ஒளிப்பதிவில் நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு டென்மா இசையமைத்துள்ளார். இப்படத்தை யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்காக தயாராக இருக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி கவனத்தைப்பெற்றது.
இந்நிலையில், இயக்குநர் ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என பதிவிட்டிருந்தார். அவர் பதிவிட்டுள்ள அந்த போஸ்டர் தன் பால் ஈர்ப்பாளர்களின் அடையாள கொடியின் வண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால் 'நட்சத்திரம் நகர்கிறது' படம் தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்த வாழ்க்கையை காதல் மூலம் பதிவு செய்யும் படைப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் உறுதியாகும் பட்சத்தில் தமிழின் முதல் தன்பாலின ஈர்ப்பாளர்கள் சினிமா என்ற பெருமையை இப்படம் பெறும் எனக் கூறப்படுகிறது.
» சந்தானத்தின் 'குலுகுலு' படத்தின் திரையரங்க உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் மூவிஸ்
» ‘உங்களுக்கு ரூஸ்ஸோ சகோதரர்களை தெரியுமா?' - அரங்கத்தை சிரிக்க வைத்த தனுஷின் பேச்சு
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago