'உறியடி' விஜய் குமார் - சேத்துமான்' இயக்குநர் தமிழ் கூட்டணியில் புதிய படம்

By செய்திப்பிரிவு

'உறியடி' விஜய் குமார் ஹீரோவாக நடிக்கும் அடுத்தப் படத்தை 'சேத்துமான்' இயக்குநர் தமிழ் இயக்கவுள்ளார்.

'உறியடி' படம் மூலம் புகழ்பெற்ற நடிகர் விஜய் குமார் தனது அடுத்தப் பட வேலைகளை துவங்கியுள்ளார். ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் இணைந்து அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை துவங்கியுள்ளார். இம்முறை அவர் படத்தை அவரே இயக்கவில்லை. மாறாக, சமீபத்தில் கவனம் பெற்ற திரைப்படமாக அமைந்த 'சேத்துமான்' படத்தை இயக்கிய தமிழ் இந்தப் படத்தை இயக்குகிறார்.

கிராமப்புற பின்னணியில் அரசியல், ஆக்‌ஷன், காதல், கலந்த குடும்ப பாங்கான திரைப்படமாகவும், ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாகவும் உருவாகவுள்ளதாக படகுழுத் தெரிவித்துள்ளது.

ஒரு கட்ட படப்பிடிப்பில் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறது. 60 நாட்களில் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி என்பவர் நடிக்கிறார். மேலும் வத்திக்குச்சி திலீபன், பாவெல் நவகீதன், மரியம் ஜார்ஜ் போன்றோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

‘96’ படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மகேந்திரன் ஜெயராஜூ ஒளிப்பதிவும், கோவிந்த வஸந்தா இசையமைப்பு பணிகளையும் கவனிக்கின்றனர். 96 பட இயக்குநர் சிஎஸ் பிரேம் குமார் இதில் எடிட்டராக பணியாற்றவுள்ளார். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனங்களை எழுதியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்