ஜஸ்வந்த் சிங் பயோபிக் படத்திற்காக அக்சய் குமார் வைத்த ஒட்டு தாடி: ட்ரோல் செய்த நெட்டிசன்கள்

By செய்திப்பிரிவு

ஜஸ்வந்த் சிங் பயோபிக் படத்திற்காக பாலிவுட் நடிகர் அக்சய் குமார் வைத்துள்ள போலி தாடி ஃபர்ஸ்ட் லுக் போட்டோவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்துள்ளனர். கொஞ்சம் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துங்கள் என நெட்டிசன்கள் வலியுறுத்தி உள்ளனர்.

திரைத்துறையில் சில நடிகர்கள் தாங்கள் நடித்து வரும் திரைப்படத்திற்காக மிகவும் அர்ப்பணிப்புடன் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார்கள். உடலை ஏற்றுவது, உடல் எடை குறைப்பது, தாடி மற்றும் தலைமுடி வளர்ப்பது என பலவற்றை சொல்லலாம். சமயங்களில் சில நடிகர்கள் செயற்கையாக ஒட்டு தாடி போன்றவற்றை பயன்படுத்துவதும் உண்டு. அது அப்பட்டமாக அப்படியே திரையில் தெரியும்.

அப்படி ஒரு வேலையை செய்து தான் வசமாக சிக்கியுள்ளார் நடிகர் அக்சய் குமார். தற்போது அவர் ஜஸ்வந்த் சிங் பயோபிக் படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது. கடந்த 1989-இல் மேற்கு வங்க மாநில சுரங்கம் ஒன்றில் வெள்ள நீரில் சிக்கியிருந்த சுரங்க தொழிலாளர்களை மீட்டவர். பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் பகுதியில் கடந்த 1939-இல் பிறந்தவர் அவர். பொறியாளராக பணியாற்றிய அவர் கடந்த 2019-இல் மரணமடைந்தார்.

தற்போது அவரது சுயசரிதை படத்தில் தான் அக்சய் நடிக்கிறார். இதற்கான ஃபர்ஸ்ட் லுக் காட்சி அண்மையில் வெளியானது. ஜஸ்வந்த் சிங் தாடியுடன் பெரும்பாலான புகைப்படங்களில் காட்சி அளிக்கிறார். அவரை போலவே இருக்க வேண்டும் என்பதற்காக அக்ஷய், ஒட்டு தாடி வைத்துக் கொண்டுள்ளார். இப்போது அதை தான் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

அவர் ஏன் இந்த ஒரு படத்தில் மட்டும் முழு கவனம் செலுத்தி, ரியல் தாடி வைத்து நடிக்கக்கூடாது. ஒரே நேரத்தில் பல படங்களில் நடிப்பதால் தான் அவர் இப்படி செய்கிறார். கொஞ்சமேனும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துங்கள் என தெரிவித்துள்ளனர் நெட்டிசன்கள். அதில் சில பதிவுகள்…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்