நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை; விரைவில் டிஸ்சார்ஜ்: மருத்துவமனை விளக்கம்

By செய்திப்பிரிவு

நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பில்லை என்றும், அவர் விரைவில் டிஸ்சார்ஜ் ஆவார் என்றும் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பாக காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், ''நெஞ்சு வலி காரணமாக நடிகர் விக்ரம் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ நிபுணர்கள் மூலம் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு மாரடைப்பு இல்லை, தற்போது அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. விரைவில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நடிகர் விக்ரம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தவறான தகவல் பரவிய நிலையில், மருத்துவமனை நிர்வாகம் தற்போது விளக்கமளித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

மேலும்