சென்னை: நடிகர் விக்ரம் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். 1990-ல் வெளியான 'என் காதல் கண்மணி' படத்தின் மூலம் தமிழ்த் திரை ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இயக்குநர் பாலாவின் 'சேது' தொடங்கி பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். அவரது நடிப்பில் உருவாகியுள்ள 'கோப்ரா' திரைப்படம் விரைவில் திரைக்க வரவுள்ளது.
இதனிடையே, மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் டீசர் இன்று மாலை வெளியிடப்பட இருக்கிறது.
இந்நிலையில், நடிகர் விக்ரமுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என தகவல் வெளியானது.
» வெளியானது பொன்னியின் செல்வன் அருள்மொழி வர்மன் போஸ்டர்
» சூர்யா, ஜோதிகாவை பார்த்ததும் எனக்கு பேச்சு வரவில்லை - 'கார்கி' பட விழாவில் சாய் பல்லவி
இது தொடர்பாக விக்ரம் தரப்பில் விசாரித்தபோது, ''காய்ச்சல் காரணமாக நேற்று இரவு ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர், இன்று காலை நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். மற்றபடி அவருக்கு மாரடைப்பு என வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை. தற்போது விக்ரம் நலமுடன் இருக்கிறார்'' என தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago