'பொன்னியின் செல்வன்' படத்தின் ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், பழுவூர் ராணி நந்தினி,குந்தவை ஆகிய கதாபாத்திரங்களின் தோற்றங்கள் வெளியான நிலையில் தற்போது ராஜ ராஜ சோழன் என்கிற அருள் மொழி வர்மனின்
கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயம் ரவியின் தோற்றம் வெளியாகி உள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கல்கியின் புகழ்பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலின் திரை ஆக்கம்தான் இந்தப் படம்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது. அண்மையில் 'வருகிறான் சோழன்' என்ற தலைப்புடன் 'பொன்னியின் செல்வன்' படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது.
இந்த நிலையில் இப்படத்தில் ராஜ ராஜ சோழன் என்கிற அருள்மொழிவர்மனின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயம் ரவியின் தோற்றம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகி உள்ளது.
அதில், “ தொலைநோக்கு கொண்ட இளவரசர், பொற்காலத்தின் சிற்பி, ராஜ ராஜ சோழன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது,
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் டீசர் இன்று மாலை வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago