வெளியானது பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஃபர்ஸ்ட் லுக்

By செய்திப்பிரிவு

பா.ரஞ்சித் இயக்கும் 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராமன் நடிக்கும் திரைப்படம் 'நட்சத்திரம் நகர்கிறது'. இந்தப் படத்தில் நாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். இவர்களுடன், 'டான்சிங் ரோஸ்' ஷபீர், கலையரசன் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். கிஷோர் குமார் ஒளிப்பதிவில் நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு டென்மா இசையமைத்துள்ளார்.

முழுக்க முழுக்க காதல் படமாக உருவாகும் இப்படத்தை யாழிபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. விரைவில் வெளியாகவிருக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியிருக்கிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை பா.ரஞ்சித் இயக்குகிறார். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய திரைப்படம் பிரமாண்டமாக பீரியட் தயாராகவுள்ளது. இடையில் பாலிவுட்டில் 'பிர்சா முண்டா' படத்தையும் இயக்க இருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE