ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் 'டிரைவர் ஜமுனா' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
'வத்திக்குச்சி' படத்தின் இயக்குநர் கிங்ஸ்லின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. 18 ரீல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஆர்.ராமர் படத்தொகுப்பு செய்கிறார்.
க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் கேப் (cab) டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இந்நிலையில், படத்தின் ட்ரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ட்ரெய்லரை பொறுத்தவரை கேப் டிரைவராக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், கொலை செய்ய செல்லும் கும்பல் ஒன்றிடம் சிக்கிக்கொள்கிறார். போலீஸுக்கும், கொலைகார கும்பலுக்குமான சண்டையில் இடையில் சிக்கிக்கொள்ளும் ஐஸ்வர்யா ராஜேஷ் கொலைகார கும்பலை எப்படி சமாளிக்கிறார் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லும் படமாக 'டிரைவர் ஜமுனா' இருக்கும் என்பதை இந்த ட்ரெய்லர் உணர்த்துகிறது.
» அடுத்த மாதம் வெளியாகும் ஏகே61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்?
» 'மெட்ராஸ்' ஹரி, 'டூலெட்' ஷீலா நடிக்கும் புதிய படம் - தொடங்கிவைத்த பா.ரஞ்சித்
வாலஜாபாத் டூ ஈசிஆர் பயணமே மொத்த படமாக இருக்கும் என தெரிகிறது. இடையில் சில கிளைக்கதைகளை இணைத்து படமாக்கியிருக்கிறார்கள். ட்ரெய்லரில் வரும் சில கேமரா ஆங்கிள்கள், பிண்ணனி இசை கவனம் பெறுகிறது.
இறுதியில் நிதானமாக நின்றுகொண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் டீ குடிக்கும் காட்சி ரசிக்க வைக்கிறது. முன்னதாக நயன்தாரா நடிப்பில் பெண் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தி 'ஓ2' படம் வெளியானது. தற்போது, இந்தப்படம் பெண் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தியிருக்கிறது. அண்மையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான 'சுழல்' வெப்சீரிஸ் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago